கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளை மற்றும் நில உரிமையாளர்களுக்கு ரூ 373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துரை..!

கோவை மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்கு சட்ட விரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பரிந்துரைத்துள்ளார்.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நில உரிமையாளர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்ன தடாகம், சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய கிராமங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து செங்கல் சூளைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டுள்ள மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார்.



இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நில உரிமையாளர்களுக்கும், செங்கல் சூளை நிறுவனங்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளிலும் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டுள்ள மண் தொடர்பாக கனிம வளத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செங்கல் செய்வதற்காகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண் தரத்தை ஆய்வு செய்து அதற்கான மதிப்பீடு குறிப்பிடப்பட்டு அபராதம் விதிக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயமே இறுதி செய்யும் என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...