75 ஆவது சுதந்திர தின விழா - கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை…!

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கோவை மாநகர உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் மோப்பநாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



கோவை: வரும் 15 ஆம் தேதி கொண்டாபடவுள்ள 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 



அதன்படி, கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.



கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கோவை மாநகர உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் மோப்பநாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட போலீசார் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளையும் சோதனை மேற்கொண்டனர்.



75-ம் சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில், கோவை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளபடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த சோதனையின்போது, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்பது தொடர்பாகவும் மொப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 



அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...