கோவையில் பெண்ணிடம் கந்துவட்டி வசூல் - தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கைது..!

கடன் கொடுத்து விட்டு, பின்னர் கந்துவட்டி மற்றும் தொல்லை கொடுத்து வந்த கோவை ராமநாதபுரம் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பழனியப்பன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று காலகட்டத்தில் தொழில் முடக்கம் காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி வசூல் செய்வதாக, கோவையை சேர்ந்த தம்பதி அளித்த புகாரின் பேரில், அந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் - வினுதா தம்பதி. சுயதொழில் செய்து வந்த நிலையில், கொரோனா தொற்று காலகட்டத்தில் தொழில் முடக்கம் காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (52) என்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக, தனது கணவர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் சில ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளனர். மேலும், இவர் மூலம் தனக்கு தெரிந்தவர்களுக்கும் பழனியப்பனிடம் கடன் பெற்றும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நான் வாங்கிய ரூ.36.60 லட்சம் கடனுக்கு, ரூ.7.70 லட்சம் வட்டியாக செலுத்திய பின்னும், தான் கொடுத்த ஆவணங்கள், காசோலைகள் போன்ற ஆவணங்களை திருப்பி கேட்ட போது, கொடுக்க மறுத்த பழனியப்பன் கூடுதல் கந்து வட்டி கேட்டதோடு, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

எனவே, கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் பழனியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மாநகர் போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கந்துவட்டி வசூல் செய்யப்பட்டது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, பழனியப்பன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில், 766 காசோலைகள், 163 முத்திரை.தாள்கள், நோட்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பழனியப்பனை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடன் கொடுத்து விட்டு, பின்னர் கந்துவட்டி மற்றும் மிரட்டல் விடுத்து வந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசாருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...