கோவை வடவள்ளி சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீண்..!

இந்திரா நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்கவும், சாலையை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக வழிந்தோடி குழிகளில் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை தடாகம் சாலையில் இடையர் பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டது.

ஏற்கனவே இந்த சாலை கடுமையாக சேதம் அடைந்திருந்த நிலையில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.



இந்த நீர் அங்குள்ள குழிகளில் நிரம்பி இருப்பதால் குளம் போல் தேங்கி உள்ளது.



இதனால் அவ்வழியே செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும் பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



குறிப்பாக பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து வரும் பெண்கள் குழியில் தவறி விழுந்து விடுவோமோ என்கிற அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கவும், சாலையை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடையர்பாளையம் பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் சாலையில் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...