கோவையில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தி கோட்டையை திறந்து வைக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை கே.ஜி சாவடியில், 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தி கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்கிறார்.


கோவை: கோவையில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தி கோட்டையை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்கிறார்.

ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-

ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் கோவை லயன்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தேசபக்தி கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் 68வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 126 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை ரேஸ் கோர்ஷில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதே போல் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு 70 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 'என் தேசம் என் சுவாசம்' என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் மற்றும் 67 தங்க காசுகள் பரிசாக கொடுக்கப்பட்டது.

75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி 150 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை நிரந்தரமாக பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பாலக்காடு மெயின் ரோடு சாவடியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் மூன்று கோடி செலவில் பிரம்மாண்டமாக தேச பக்தி கோட்டை உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 14ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

இந்த தேசபக்தி கோட்டையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார். கமாண்டிங் ஆபீசர் 110. டெரிடோரியல் ஆர்மி (சென்னை) கோலோனல் தினேஷ் சிங் தன்வர், மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...