'CPI 25-வது மாநில மாநாடு'- ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் பாஜக; திருப்பூரில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கடும் தாக்கு..!

பாஜக ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும், நாடு ஒன்று பட வேண்டுமானால் பாஜகவின் கருத்து எதிர்க்கப்பட வேண்டும். பாஜக மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது என தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள சந்திராபுரம் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்றது.



இம்மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதி நாள் நிகழ்வில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.



இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மூன்றாவது முறையாக முத்தரசனும், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவராக திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா அறிவித்தார்.



இதனை அடுத்து மாநாட்டின் இறுதி நிகழ்வாக திருப்பூர் யூனியன் மில் சாலையிலிருந்து அமர்ஜோதி நகர் பத்மினி கார்டன் வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் செந்தொண்டர் பேரணியாக கையில் செங்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.



பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா பேசும் போது ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரி என ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.

பாஜக ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும், நாடு ஒன்றுபட வேண்டும் என்றால் பாஜகவின் கருத்து எதிர்க்கப்பட வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது எனவும் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என இ.கம்யூ கருதுகிறது.

இது வரலாற்றுத் தேவை. பாஜக வெற்றி பெற்றால் அது பேரிடி எனவும், பாஜக ஆட்சியில் நாடு அழிகிறது. பாஜகவை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டும். ஆளுநர்களுக்கு என்ன தேவை என இ.கம்யூ கேட்கிறது. ஆனால் பாஜக மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது.

பீகாரில் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உறவை துண்டித்து, பாஜக கூட்டணி மக்களுக்குத் துரோகம் என வெளியேறியுள்ளார். நாடு காப்பாற்ற அரசியல் சாசனம், ஜனநாயகம், காப்பாற்ற பாஜக அகற்றப்படவேண்டும்.

அதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும். அதிகார பலம் பணம் பலம் வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. இதனை மக்களுக்காக உள்ள கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக பேசினார்.

இதற்குப் பின் மூன்றாவது முறையாக மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்தரசன் பேசும் போது தன்னை மீண்டும் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்த மாநில பிரதிநிதிகளுக்கும், தேசிய பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர் மத்திய அரசின் தவறான கொள்கைகள், விலைவாசி உயர்வு, மின்சாரத்தைத் தனியாருக்கு விற்பதற்கு ஏதுவாக கொண்டு வர உள்ள மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை எதிர்த்து வருகிற 30-ஆம் தேதி மாநில தழுவிய மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...