கோவையில் 'சொகுசு காரில் வந்து கஞ்சா விற்பனை' இருவர் கைது; 21-கிலோ கஞ்சா, ரூ.2.40-லட்சம் மற்றும் BMW கார் பறிமுதல்..!

விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.



கோவை: கோவை மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மை காலமாக ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் உதவி ஆய்வாளர் செங்கோல்நாதன் தலைமையிலான போலீசார் சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர் மார்க்கெட் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மார்க்கெட் அருகே BMW சொகுசு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்து கடந்து சென்று மீண்டும் அதே பகுதிக்கு போலீசார் வந்த போது ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அருகே சென்று காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனையிட்ட போது அதில் பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் வீர சிவக்குமார் 55), மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்திக் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



மேலும் மொத்த விற்பனைக்காகக் கோவை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வீர சிவக்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2.40 லட்சம் பணம் மற்றும் BMW சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...