வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர்களே போலி நகைகளை வைத்து ரூ 40.80 லட்சம் பணத்தை மோசடி செய்த பெண் உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவான இருவரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை தனியார் தங்க நகை கடன்நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின்ஆவணங்களை பயன்படுத்தி போலி நகைகளை வைத்து பணம் எடுத்து மோசடி செய்தபெண் உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICL fincorp என்ற நிறுவனம், தமிழகத்திலும் பல்வேறு கிளைகள் உள்ளது. இந்த நிறுவனம் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு அதற்கு பணம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிறுவனத்தில் வழக்கமான தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த நிறுவன கிளையில் போலி தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கிளையில் உள்ள அனைத்து நகைகளையும் தணிக்கை செய்து பார்த்த பொழுது, வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 598 கிராம் போலி தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டு அதற்கு ஈடாக ரூ.40.80 லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
வாடிக்கையாளர்களின் பெயரில் குனியமுத்தூர் கிளை ICL fincorp நிறுவனத்தின் கிளை தலைவர் கார்த்திகா, மேலாளர் சரவணன், உதவி மேலாளர் சத்யாஆகியோர் கூட்டு சேர்ந்து ரூ.40.80 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்தது தணிக்கையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்தநிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் சத்யா என்பவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான கிளை தலைவர் கார்த்திகா மற்றும் மேலாளர் சரவணன் ஆகிய இருவரையும்குற்றப்பிரிவுபோலீசார் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர்களே ரூ.40.80 லட்சம் பணத்தை மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.