75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள் - கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 13-15 ஆம் தேதி வரை கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிட தேசிய அளவிலும் மாநில அளவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றிய பின் அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசிய கொடியின் புனித தன்மையை பேணும் வகையில், எவ்வித அலட்சியமும் அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும். குறிப்பாக, தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல் வெளிலோ வீசக் கூடாது.

பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுமாறு, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...