போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க பால தூண்களில் செங்குத்து தோட்டத்தை அமைக்க வேண்டும். இது நமது கோவைக்கு மேலும் அழகை சேர்க்கும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் என பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
கோவை: போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டம் அமைக்க வேண்டும் என கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது கோவையில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியின் விளம்பரங்களும், போஸ்டர்களும் தான் இருக்கிறது. அசிங்கமாகவும் அசுத்தமாகவும் இருக்கிறது. ஒரு கட்சி கொண்டுவரும் திட்டங்கள் தான் அந்த கட்சியை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் இங்கு போஸ்டர்களும் பேனர்களும் ஒரு கட்சியை விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கோவையில் பாமக மட்டுமே போஸ்டர்கள் ஒட்ட மாட்டோம் என்று சபதம் எடுத்துள்ளனர். நாங்கள் சொல்லும் திட்டங்களை வைத்து மட்டுமே அரசியல் செய்கிறோம். இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் கண்டிப்பாக பேசப்படும். அதுவே எங்கள் நம்பிக்கை.
போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க பால தூண்களில் செங்குத்து தோட்டத்தை அமைக்க வேண்டும். இது நமது கோவைக்கு மேலும் அழகை சேர்க்கும். காற்றின் தரத்தை மேம்படுத்தும். செங்குத்து தோட்டத்தில் உள்ள தாவரங்கள் காற்றிலிருந்து துகள்களை வடிகட்டி கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜன் ஆக மாற்றும்.
இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.