கோவை அன்னூரில் கோவில் திருவிழாவில் மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்து சென்ற கிராம மக்கள்..!

பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுளர்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.



கோவை: கோவில் திருவிழாவில் மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்துச் சென்றனர்.

கோவை அன்னூர் இந்திரா நகர் பகுதியில் அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.



3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது.



ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க அன்னூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்‌.



பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுளர்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்வை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...