ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - கோவையில் வைகோ பேட்டி..!

ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லுகிறார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் எனக் கூறுகிறார், பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் எனவே அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.



கோவை: கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக தான் இடையிலே கோவிட் காலத்தில் நான் சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், தற்போது இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் துவங்குவது இது தான் மதிமுகவின் ஜிப்ராண்டல் கோட்டை என தெரிவித்தார்.

இந்த கொங்கு மண்டலத்தில் தற்போது ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவும், தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை சென்னையில்மிகச் சிறப்பாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மதிமுக திமுகவோடு, லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு, சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கும், ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும் ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்று சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை வீழ்த்துவதற்கும் அண்ணாவின் வழியில் கலைஞர் எவ்வாறு கொள்கைகளைப் பாதுகாத்து வந்தாரோ அது போலவே திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.



தமிழகத்தில் உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை எனவும் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியான ஆட்சி எனவும், திராவிட இயக்க லட்சிய ரீதியான ஆட்சி என்ற முறையில் அவர்கள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதனால் மிகப்பெரிய பாதிப்பிற்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும், ஜி எஸ் டி யினால் பொதுமக்கள் மிதிக்கப்படுகிறார்கள் தவிர அதானியோ அம்பானியோ அல்ல என தெரிவித்தார். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்து பொருட்களும் விலை உயர்வதாகவும், தெரிவித்த அவர் மோடி அரசின் மீது மக்களுக்கு நாள்தோறும் வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வெங்கையா நாடு கூறியது குறித்த கேள்விக்கு அது சரிதான் என தெரிவித்த அவர், நடுநிலையோடு வெங்கையா நாயுடு அதனை கூறியுள்ளதாகவும் அதனை ஆளுகின்ற கட்சி பின்பற்றினால் நல்லது என தெரிவித்தார்.



சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு அனைவரது இல்லங்களிலும் கொடியேற்றுவது குறித்து கருத்து கேட்டதற்கு தேசிய கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான் எனவும், அது வரவேற்கத்தக்கது தான் எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை யாருக்கும் புரியவில்லை ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லுகிறார் மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் எனக் கூறுகிறார் பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் எனவே அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.







Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...