கோவை 27-வது வார்டில் திடீரென்று வெடித்த மின்மாற்றி; துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளால் அசம்பாவிதம் தவிர்ப்பு...!

பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் திடீரென்று மின்மாற்றி (Transformer) வெடித்த சம்பவத்தில், துரிதமாக மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இரு தினங்களுக்கு முன், கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கிரியம்மன் கோவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மின்சார மின்மாற்றி காலை 9:30 மணி அளவில் திடீரென்று வெடித்து செயல் இழந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நுகர்வோர் சேவை மையத்திற்கு திமுக, தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முஹம்மது அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.



புகாரின் அடிப்படையில், உடனடியாக கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று முஹம்மது அன்சாரி தெரிவித்தார்.



மின்மாற்றி பழுது நீக்கபட்ட போது, 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஈ.ரா. தனபால், எலக்ட்ரீசியன் வேலு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...