கோவையில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சவுரிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த தனிநபரிடம் இருந்து, இந்து சமய அறநிலையத் துறையினர் நிலத்தை மீட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில், இந்த கோவிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 27.78 சென்ட் நிலத்தை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் "இந்த நிலம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது" என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...