கோவை தடாகம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கூடத்தை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கூடம் அருகே பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் தடாகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் திருமண மண்டபம், சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கூடமாக மாற்றப்பட்டு, திறக்கப்பட்டது. FL2 சான்று பெற்று செயல்பட்டு வந்த இந்த மதுபானக் கூடத்தினால், அப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி வந்த அப்பகுதி மக்கள், அந்த மது கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக, மதுபானக் கூடம் அருகே ஒரு பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் தெரிவித்தனர்.



இந்த நிலையில், அந்த மதுபான கூடத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு வந்த, தடாகம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.



பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...