ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் கடும் எதிர்ப்பு - திருப்பூர் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரியும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரியும், பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரியும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரியும் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் மற்றும் விவசாயிகள் என 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு தொகுப்பணைகள் மூலம் திருப்பூர் கோவை மாவட்டங்களில் சுமார் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், பாசனப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) ஆழியாறு, மற்றும் திருமூர்த்தி அணை மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.



பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தற்போது கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையில் ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரு கூட்டுக் குடிநீர் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாறு மூலம் திட்டம் செயல்படுத்த படுவதாக தெரிகிறது.



ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆழியாற்றின் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர். ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டிற்கு 2.44 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.



ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசனப் பகுதி விவசாயிகள் கோரி வருகின்றனர்.



ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரியும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரியும், பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் மற்றும் விவசாயிகள் என 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...