பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் மட்டும் வளர முடியாது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆருடம்..!

பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும், தோழமை கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலை எடுக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்.


திருப்பூர்: திமுக மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும். பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகத்தை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார்.



பிறகு திருப்பூரில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில் துளிர் விட்டு அல்ல வேர் விட்டு வரலாறு படைத்தது என கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத்தில் அவர்கள் அனுபவித்தது கொஞ்சம் அல்ல. தூக்குமேடையை இவர்கள் அலங்கரித்தார்கள். பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கி குண்டுகளுக்கும், தூக்கு கயிறுகளுக்கும் அஞ்சாமல் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று புகழ்ந்தார்.

மேலும், நல்லக்கண்ணு வீரம் நிறைந்தவர். எதற்கும் அஞ்சாதவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பானவர். உயிர்பலிக்கு அஞ்சாமல் நல்லக்கண்ணு அவர்கள் போராடி கட்சியை வளர்த்தார்கள் என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு இப்பொழுது வந்த அரசு சனாதன அரசாக, இந்துத்துவா திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்பதை திணிக்கிறது. ஒரே நாடாக அமைந்தால் சோவியத் யூனியன் போல பிரிந்து போகும் சூழல் ஏற்படும். அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.



ஆயுதப் போராட்டத்தை நாம் கையில் எடுக்கத் தேவையில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியவர், திருப்பூரில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதி என்பது சனாதன சக்திகளை ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க எடுத்துக் கொள்ளும் உறுதியாகும் என்றார்.

மேலும், திமுக மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும். பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றவர், தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் இந்த ஒற்றுமையைப் பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலை எடுக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார் .

இறுதியாக நமக்குக் கடமை இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைகாட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆலயங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாம் ஆலயங்களுக்கு விரோதிகள் அல்ல. அதே நேரம் பகுத்தறிவு கருத்துக்களை பேசுபவர்கள் அந்த பகுத்தறிவு கருத்துக்களை கூற வேண்டும் என்றார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...