கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குழந்தைகள் காப்பகம், நூலகம், காவலர் மனமகிழ் மன்றம் அமைப்பு

காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலன் கருதி, ஆயுதப்படை வளாகத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த காவலர் குழந்தைகள் காப்பகத்தை, மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் திறந்து வைத்து குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கினார்.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குழந்தைகள் காப்பகம், நூலகம், காவலர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளதை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலன் கருதி, ஆயுதப்படை வளாகத்தில் (PRS Campus) கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த காவலர் குழந்தைகள் காப்பகத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் V. பாலகிருஷ்ணன், திறந்து வைத்தார்.

பின்னர் காவலர்களின் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கினார்.



அதை தொடர்ந்து கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்திற்கு, காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வந்து செல்ல சிரமமாக இருந்த சூழலில், காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலன் கருதி அந்நூலகத்தை அவ்விடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு மாற்றம் செய்து, அதனையும் காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.



மேலும் காவலர்கள் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வண்ணம், கேரம், செஸ் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய காவலர் மனமகிழ் மன்றத்தையும், காவலர்களின் நலன் கருதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவின் பொழுது, சுகப்பிரசவத்திற்கான வழி காட்டு நூல்கள் கர்ப்பிணியாக உள்ள பெண் காவலர்களுக்கு வழங்கினார்.



மேற்படி காவலர் குழந்தைகள் காப்பகம், நூலகம், காவலர் மனமகிழ் மன்றம் மற்றும் சுகப்பிரசவத்திற்கான வழி காட்டு நூல்கள் ஆகியவற்றை அனைத்து காவலர்களும் அவர்களின் குடும்பத்தாரும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அறிவுரைகள் வழங்கினார்.

இவ்விழாவில் ஆயுதப்படை காவல் துணை ஆணையர் T.V. முரளிதரன், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் A. சேகர், காவல் ஆய்வாளர் M. பிரதாப் சிங் மற்றும் இருபால் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டார்கள்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...