கோழிக்கொண்டை பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை..!

ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30-ஆக சரிந்து விட்டது. ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3-நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிக்கொண்டை பூவின் தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: கோழிக்கொண்டை பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளக்கிணறு, ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். சம்பங்கி, செண்டு மல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும்.

கோழிக்கொண்டை பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூவிற்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கோழி கொண்டை பூ விவசாயிகள் கூறுகையில், முன்பு முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.60 க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30, ஆக சரிந்து விட்டது. மேலும் தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

இதனால் கோழிக்கொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கோழிக்கொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பல வாரங்கள் பராமரித்து வளர்த்த செடிகளில் பூத்துக் குலுங்கும் பூக்கள், தற்போது செடியோடு கருகும் நிலையில் உள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...