'டாஸ்மாக் எதிர்ப்பு' - மதுபானங்களை தரையில் கொட்டி கிணத்துக்கடவு பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்து மதுபானங்களை தரையில் கொட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு டவுன் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் வகையில் மதுபானங்களை தரையில் கொட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவர் குரும்பபாளையம் பிரிவு ஸ்ரீராம் நகர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



மனு அளிக்க வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுபானங்களை தரையில் கொட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், டாஸ்மாக் கடை அருகில் குடிதண்ணீர் குழாய் கோவில் அமைந்துள்ளதால் மிகவும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் எனவே அந்த டாஸ்மாக் கடையை(1880) அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...