கோவை தொண்டாமுத்தூரில் கொட்டும் மழையில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்..!

பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என கூறி கொட்டும் மழையில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து கொட்டும் மழையில்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.



கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லைஎன கூறி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

மேலும், சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தென்னமநல்லூருக்கு வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறினர்.

இதனால் பள்ளி பேருந்துகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் பாதிப்படைந்தனர். இதனிடையே தொண்டாமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடந்த வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...