கோவையில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது - 620 மாத்திரைகள் பறிமுதல்…!

கோவை பெ.நா.பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க தனிப்படை அமைத்துபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும், ரோந்துகளை தீவிரப்படுத்தியும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து வருகின்றனர்.

குறிப்பாக, போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து விற்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விடுதி மற்றும்இளைஞர்கள் தங்கக் கூடிய இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று, கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டபகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 620 போதை ஏற்படுத்த கூடிய வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...