கோவையில் நகையை மறைத்து மோசடி - தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு பதிவு…!

கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும், கம்ப்யூட்டரில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்து ரூபாய். 55 லட்சம் மதிப்பிலான 1,467 கிராம் தங்க கட்டிகளை, மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார்.

இந்த நிறுவனத்தில், இருந்து நகை தயாரிப்பாளர்களுக்கு தங்கக் கட்டிகளை கொடுத்து பின்னர் அவற்றை நகைகளாக வாங்கி முத்திரை வைக்கும் பணிகளை ஜெகதீஷ் செய்து வந்தார். மேலும், நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

சம்பவத்தன்று, நிறுவனத்தின் கணக்குகளை மேலாளர் கார்த்திகேயன் சரிபார்த்த போது, கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும், கம்ப்யூட்டரில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்தது தெரியவந்தது. ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,467 கிராம் தங்க கட்டிகளை, ஜெகதீஷ் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கார்த்திகேயன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...