கோவையில் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் 2022-க்கான 'நாஞ்சில்நாடன் விருது' வழங்கும் விழா..!

கோவையிலிருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு ஆகஸ்ட் 21 அன்று கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு ஆகஸ்ட் 21 அன்று கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் 2022-க்கான “நாஞ்சில்நாடன் விருது” வழங்கப்படவுள்ளது.

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017-உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். கௌரவ ஆலோசகர்களாக நாஞ்சில் நாடன், வ.ஸ்ரீநிவாசன், ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கோவையில் இருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு வழங்கப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படும். விழா விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



இவ்விழாவில் "ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லிய கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.

விருது பற்றி சிறு அறிமுகம்..!

சிறுவாணி வாசகர் மையம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசு தொகை ரூபாய் 50,000, கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது.

முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்..!

ஓவியர் ஜீவா (2018), ஆய்வாளரும், உ.வே.சா படைப்புகள் மற்றும் பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணன் (2019), பத்திரிகையாளர், எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020), மணல்வீடு ஹரிகிருஷ்ணன் (2021).

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...