'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கோவையில் தனிப்படை போலீசார் முன் கொடநாடு வழக்கு விசாரணைக்கு ஆஜர்..!

அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும் தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அந்த வகையில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதால், இன்று தனிப்படை போலீசார் முன் கொடநாடு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்.



கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளியான ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் இன்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

'கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன்' என்று மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல் வந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து மருது அழகுராஜ் விலகியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணைக்கு ஆஜரான மருது அழகுராஜ் கூறியதாவது:-

தனியார் தொலைக்காட்சியில் வெளியான புலனாய்வு செய்தியில், கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தங்களை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டேன். என்னை தொடர்ந்து இளங்கோவன் மற்றும் புலனாய்வு செய்தியாளரை விசாரிக்கும் பல தகவல் வெளியாகலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...