கோவையில் 82-வயது மூதாட்டியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப் மூலம் கட்டி கொடூர கொலை..!

சூலூர் அருகே மூதாட்டியின் கை, கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: 82-வயது மூதாட்டி கை கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி சரோஜினி(82). இவர் கணவர் இறந்த நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இவர் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு விட்டு வீட்டின் முன் உள்ள பால் பாட்டிலை எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியாகியும் பால் பாட்டில் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இதைப் பார்த்த அருகில் உள்ள மளிகை கடை வைத்திருக்கும் செல்வி என்பவர் சந்தேகமடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது சரோஜினி வாய் மற்றும் கை, கால்களில் பேக்கிங் டேப் எனப்படும் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையில் கட்டிலருகே கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட செல்வி வெளியே ஓடி வந்து அருகில் இருந்தவர்களிடம் சொல்லி உள்ளே சென்று பார்த்த போது சரோஜினி உயிரிழந்தது உறுதியானது. இது தொடர்பாக அவர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சரோஜினி உடலைக் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர்.

தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சரோஜினியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மூதாட்டி கை கால் மற்றும் வாயை பேக்கிங் டேப் மூலம் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...