திருப்பூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு..!

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி.ராஜா பெற்றுக் கொண்டார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.



நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.



இதையடுத்து மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.



மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.



இன்று மாலை சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சிறப்பு உரையாற்றுகிறார்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...