மின் கட்டண உயர்வு: கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, தமிழக அரசின் சொத்து வரி உயர்வு நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், தற்போது அரசின் மின் கட்டண உயர்வுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின் உயர்வை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை உக்கடம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,.நகர செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...