கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு..!

தொடர் மழையால், 20-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது. 26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையின் குறுக்கே மரம் விழுந்து 1 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அருந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்களும் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வாகனங்களும் ஒரு மணி நேரமாக காத்திருந்தது.



நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.



மேலும் 19-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது.

26-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



நெடுஞ்சாலைத் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாகவும், ஓட்டுநர்கள் அச்சத்திலும் செல்கின்றனர். கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...