கோவை தெலுங்குபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு..!

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு பின்னர், பொதுமக்களிடம் தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி தெலுங்குபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.76 க்குட்பட்ட தெலுங்குபாளையம், பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.



அதை தொடர்ந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் சீராக உள்ளதா என்பது குறித்தும், அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...