கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.23-ஆக உயர்வு..!

கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.23-அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக நிகழ்ந்து வரும் சிறுவாணி அணையில் தென் மேற்கு பருவ மழை துவங்கியதிலிருந்து நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு வரை வைக்க வேண்டும் என கோரி கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 40-ஆக உயர்ந்த போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் மதகுகளை 32-அடிக்கு திறந்து விட்டனர்.

இதனால் நீரை தேக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவு எட்டும் வரை அணையின் மதகுகளை திறக்க கூடாது என தமிழக அதிகாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...