கோவை அரசு கலைக்கல்லூரி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

2022-23 கல்வியாண்டு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கைக்காகக் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தம் 23-பாடப்பிரிவுகளில் 1443-இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 25-ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.



முதல் நாள் கலந்தாய்வு இன்று துவங்கியது.



முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.



கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வுக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கூறும் போது, போதுமான இருக்கை வசதிகள் செய்யவில்லை என தெரிவித்தனர்.



இதனால் சிரமமாக இருப்பதாக கூறிய அவர்கள் கலந்தாய்வில் இடம் பிடித்து படிப்பதோடு, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...