திருப்பூரில் நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு- தமிழக முதலமைச்சர் பங்கேற்பு..!

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு நாளைய தினம் திருப்பூரில் துவங்கி 4-நாட்கள் நடைபெற உள்ளது.



இதுகுறித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாடு நாளைய தினம் தொடங்க இருப்பதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், மக்கள் விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக செந்தொண்டர் படை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் மாநாட்டின் நிறைவு நாளான 9-ஆம் தேதி மாநாட்டின் முகப்பில் தேசியக்கொடி ஏற்றப்படும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொண்டர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் 20-கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களிலும் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்து வருவது ஏன் என தெரியவில்லை என்றும், அதிமுகவிற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பாஜகவால் ஏற்படுத்தப்படுவதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் சுயமாக சிந்திக்கும் முடிவை அதிமுக இழந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...