மாடு அறுவை கட்டணத்தை குறைக்க கோரி - கோவை மாட்டு இறைச்சி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 ஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என மனுவில் தெரிவித்தனர்.



கோவை: மாடு அறுவை கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாட்டு இறைச்சி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு மாடு அறுவை மையங்களில் மாட்டிற்கு தலா ரூ.10 மட்டும் வசூல் செய்யப்பட்ட நிலையில், புதிதாக ஒப்பந்தம் விடப்பட்ட பின் மாட்டிற்கு தலா ரூ.250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கட்டணத்தை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து வியாபாரிகள் கூறும் போது:-

கோவை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 300 மாட்டு இறைச்சி விற்பனை வியாபாரிகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 மஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என தெரிவித்தனர். கட்டணத்தை குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...