பாஜக அரசை கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் - 100-க்கும் மேற்பட்டோர் கைது..!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத பாஜக அரசை கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருப்பூரில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு கண்டித்தும் அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...