திருப்பூர் நஞ்சராயன் குளம் அருகே நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

வழக்கு நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த மரம் நடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் நஞ்சராயன் குளம் அருகே நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் நஞ்சராயன் குளம் 440 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிச் செல்ல கூடிய நிலையில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நஞ்சராயன் குளக்கரையில் அமைந்துள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியின்போது முறைகேடாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அரசு விற்பனை செய்துள்ளது.



தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முறைகேடாக விற்பனை செய்த நிலத்தை அரசே மீட்டு பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நஞ்சராயன் பாதுகாப்பு குழு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்ற நிலையில் இன்று தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மரம் நடும் விழா அறிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் மரம் நடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கூலிபாளையம் நஞ்சராயன் குளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...