கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 32 பேர் கைது – 17.285 கிலோ கஞ்சா பறிமுதல் – மாவட்ட காவல் துறை அதிரடி…!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்பனை செய்த 32 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 18 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரைகளை தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் நடைபெற்ற தனிப்படை போலீசாரின் தீவிர சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 17, 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், கோவை புறநகர் பகுதிகளில் தொடர் கண்காணிப்பின் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 32 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 17ஆயிரத்து 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 பேர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கையும், 27 பேர் மீது நன்னடத்தை பிணையமும், நீதிமன்ற காவலில் உள்ள 6 பேர் மீது பிணை முறிவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி, பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...