கோவையில் இரண்டு யானைகள் மோதல் – 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு….!

கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டதில், ஒரு யானை தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. நாளை உடற்கூர் ஆய்வு நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைகட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டு இருப்பதாக, அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கோவை வனச்சரக வன ஊழியர்கள் மதியம் 2 மணியளவில் சென்று பார்த்தபோது, சண்டையில் ஏற்பட்ட காயங்களால் ஒரு ஆண் யானை காப்பு காட்டுக்குள்ளே எல்லையோரத்தில் தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சண்டையிட்ட மற்றொரு யானையின் உடல் நலம் அல்லது அது எங்கு உள்ளது..? என்பது குறித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...