கோவையில் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை 30 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுத்துறை இன்சூரன்ஸில் ஓய்வுதியம் பெறுவோர் சங்கத்தினர் யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொதுத்துறை, பொது இன்சூரன்ஸ் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர் சங்க உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடம் நேஷனல், யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நியூ இந்தியா மற்றும் எல்ஐசி நிறுவனங்களின் நிர்வாக குழு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே பரிந்துரைத்த போதும் அதனை அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினர், தொடர்ந்து பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் கோவை மண்டல பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என போராட்ட முடிவில் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...