மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை வழங்க வேண்டும், ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட முன்னோடி வங்கியின் மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சமூக சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி பேசுகையில் மாவட்டத்தில் சிறு மற்றும் குரு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்வதாகவும் இங்கு உள்ள தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்ப்பதற்கும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகளின் பங்கு மிகவும் அவசியமாக உள்ளதாக தெரிவித்தார்.

வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்குதல் தொழில் துறையினர் பயன்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை வங்கிகள் தொழில் முனைவோர், மாவட்ட தொழில் மையம் ஆகியன இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் வழங்கப்படுகின்றது எனவும் அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என கூறினார்.

மாவட்டத்தில் கல்வி கடன் ரூ.150 கோடி மதிப்பீட்டில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்த அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

கடன் திட்டங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு விரைவாக கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் சமூகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.



இக்கூட்டத்தில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல்கந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் அமிர்த பாலசுப்ரமணியம், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலை ராவ், தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...