குடியிருப்பு பகுதியில் நவீன மின் மயானம் எதிர்த்து திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பச்சாபாளையத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் நவீன மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தையடுத்த பச்சாபாளையம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி நவீன மின் மயானம் அமைப்பதற்கு பல்லடம் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பச்சாபாளையம் பகுதியை ஒட்டியுள்ள ஓடையை, கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அங்கு துர்நாற்றமானது வீசி வருகிறது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நவீன மின் மயானம் அமைத்தால் அங்கு பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் பல்லடம் நகராட்சியில் புகார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.



இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நவீன மின் மயானம் பச்சாபாளையம் குடியிருப்பு பகுதியில் அமைவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...