கோவை சிறையில் கள்ள நோட்டு வழக்கு குற்றவாளி மரணத்தால் பரபரப்பு

கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நஞ்சை இடையாரை சேர்ந்த சுப்பையன் (70) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.


கோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நஞ்சை இடையாரை சேர்ந்தவர் சுப்பையன் (70). இவர் 2006-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் சிபிசிஐடி போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டவர்.

அவர் மீதான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர், அதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறை அதிகாரி சிவராசன் புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். இதனால் சிறைகைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...