மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவை புதூர் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்த கனகராஜ் குடிபோதையில் மனைவியை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: கோவை புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் 31, கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி 25, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினி குளத்துப்பாளையத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.

இந்நிலையில் கடந்த 2019 மே 31- ந்தேதி அன்று அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வாட்டர் பிளான்ட்டில் நந்தினி வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது அங்கு குடிபோதையில் சென்ற கனகராஜ் மனைவி நந்தினியும் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து கனகராஜை கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிசா ஆஜர் ஆகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...