கோவையில் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது..!

ஒருவர் மாணவியின் வீட்டின் அருகில் வசித்த சுல்தான், மற்றொருவர் உடன் படித்த சக மாணவியின் தந்தை மோகன்ராஜ் என இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான சுல்தான் பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவையில் 12 ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களையும் விடக்கூடாது என எழுதி இருந்தார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவி கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் மாணவியின் வீட்டில் அருகில் வசித்த சுல்தான் என்பதும், மற்றொருவர் மாணவியின் உடன் படித்த சக மாணவியின் தந்தை மோகன்ராஜ் என்பதும் இவர்கள் இருவரும் மாணவியை பாலியல் சீண்டல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.



இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். இதில் கைதான சுல்தான் பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...