75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தபால் நிலையங்களில் கொடி விற்பனை தொடக்கம்..!

சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தபால் நிலையங்களில் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதனால் தேசிய கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேசியக்கொடிகளை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் உட்படக் கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.



சாட்டின் வகை துணியால் தைக்கப்பட்ட தேசியக்கொடி 25-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...