இடத் தகராறு ஏற்பட்டு கோவில் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் அதே பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு புதிய வீடு கட்டிவந்தார்.
அப்போது அவரது இடத்தின் அருகே இறைச்சி கடை வைத்திருந்த ராமசாமி (76), என்பவருக்கும் பழனிச்சாமிக்கும் இடத் தகராறு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வீட்டு கட்டுமான வேலைக்காக சென்ற பழனிச்சாமியை ராமசாமி, மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகிய இருவரும் இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர்.
ராமசாமி, ஏசுகுமார் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்து பழனிச்சாமியை வெட்டிக்கொன்ற ராமசாமி, ஏசுகுமார் ஆகிய இருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய குற்றவாளியான ராமசாமி ஏற்கனவே கடந்த 1972 - 1986 வரை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.