தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 117-அடியை எட்டியது..!

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (4.8.2022) காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

பழைய ஆயக்கட்டு பாசனம், புதிய ஆயக்கட்டு பாசனம் என மொத்தம் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அணையில் இருந்து கேரளாவுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (4.8.2022) காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.

வினாடிக்கு 3894 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 2636 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மக்கள் ஆற்றுப்படுகைக்குச் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்று நீரில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட பொதுப்பணித் துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...