கோவையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

கோவையில் 15-வயது பள்ளிச் சிறுமிக்கு திருமணம் பேச்சு வார்த்தை நடப்பதாக சைல்டு லைன் எண்ணில் வந்த புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி, சம்மந்தப்பட்ட பெற்றோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த 15-வயது பள்ளி சிறுமிக்கு, அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் அறிவுறுத்தலுடன் 1098 சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற குழந்தை நல அலுவலர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையடுத்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரை போலீஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், இப்போது பேசி நிச்சயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால் நிச்சயம் கூட செய்யக்கூடாது, மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் இருந்தால் தயங்காமல் உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...