கோவையில் கார் விற்பனை மையத்தில் செக் திருட்டு: ரூ.43 லட்சம் மோசடி - 3 பேர் கைது..!

கோவையில் கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் இருந்து திருடிய காலோசலையில் கையொப்பமிட்டு நூதன முறையில் ரூ.43 லட்சம் மோசடி செய்த மூவரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கார் விற்பனை மையத்தில் செக் திருடி ரூ.43-லட்சம் மோசடி செய்த 3 பேரை கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் அனீஸ் பிரசன்னா. இவர் கடந்த 2019 ஆம் வருடம் முதல் திருச்சி சாலையில் பிரசன்னா ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கியா கார்ஸ் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் சரவணன் என்பவர் அக்கவுண்ட்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மேலாளர் சரவணன் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கம்ப்யூட்டரில் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வங்கியை அணுகிய சரவணன், நிறுவனத்தின் வரவு செலவு குறித்து சரிபார்த்தபோது RTGS -Request மூலம் பணம் 42,98,100 ரூபாய் திருவண்ணாமலையில் உள்ள மூர்த்தி என்பவரது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அனீஸ் குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து துணை ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைத்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்த சேலத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகன் வெங்கடசுப்பிரமணியம் வேலை செய்து கொண்டிருந்தபோது நிறுவனத்திலிருந்து காசோலைகளை திருடிச் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்ற வெங்கட சுப்பிரமணியம் ஆரணியைச் சேர்ந்த சிவாவிடம் தன்னிடம் காசோலை உள்ளதாகவும் அதனை பயன்படுத்தி பணம் எடுத்தாலும், நம்மை யாராலும் கண்டறிய முடியாது என கூறியுள்ளார்.

இதனை சிவா ஹோட்டலில் வேலை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த தினேஷ் பாபுவிடம் கூறியுள்ளார். வெங்கட சுப்பிரமணியம்,சிவா தினேஷ் மற்றும் இவர்களது நண்பர் கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து திருவண்ணாமலை சேர்ந்த மூர்த்தி என்பவரை தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தினால் லாபம் கிடைக்கும் எனவும் தன்னிடம் உள்ள காசோலையை பயன்படுத்தி மூர்த்தியின் வங்கி கணக்கில் பணம் எடுத்துக் கொள்வதாகவும் கூறி, போலி கையொப்பமிட்ட வங்கி காசோலையை மூர்த்தியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர், மேலும் அதிலிருந்து 22,98,100 ரூபாயை மட்டும் எடுத்து சிவா மற்றும் கார்த்திக் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

மீதம் 20 லட்சம் ரூபாய் வங்கி கணக்கிலேயே இருந்துள்ளது. இதனுடைய திருவண்ணாமலை ஆரணி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வலை வீசி தேடிய போலீசார் பதுங்கி இருந்த சிவா, கார்த்திக்,தினேஷ் பாபு ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் தினேஷ் வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய், சிவா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரிடம் இருந்த 22,98,100 ரூபாய் பணம் என மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூவரையும் கைது செய்து மொத்த பணத்தையும் மீட்ட மாநகர குற்றப்பிரிவு போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கட சுப்பிரமணியத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...