வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பழங்குடி பாடகர் கேரள கலால் துறை அதிகாரிகளால் கைது..!

கேரளாவில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் 5 மாதம் ஆன 20-செடிகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த பழங்குடி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (44), இவர் கிராமிய பாடல் பாடகர். இவர் தமிழில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.

இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதை உண்மை என நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து உள்ளார்.

சுமார் 5 மாதம் ஆன 20 செடிகளை பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் 5 மாத செடி என்பதால், பூ வந்து செடியிலிருந்து வாசம் வந்துள்ளது.



இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த கேரள கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



இதையடுத்து அங்கிருந்த 20-செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரை மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...